இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை! – கொழும்பில் கொடூரம்

15 view
இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. கொழும்பு, தெஹிவளை – அபோன்சு மாவத்தை பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த இளைஞருக்கும் மற்றொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியதில் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹிவளை – அபோன்சு மாவத்தையில் வசித்து வந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய 44 வயதுடைய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைத் தெஹிவளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
The post இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை! – கொழும்பில் கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース