இலங்கையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 9ஆம் தர மாணவன்!
20 view
2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் அண்மையில் வெளியானது. இதன்படி 14 வயது மாணவர் ஒருவர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார். மாவரமண்டிய கடவட நானமல் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயதுடைய தேவும் சனஹாஸ் ரண்சிங்க என்ற மாணவனே இவ்வாறு பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார். குறித்த மாணவன் வணிகவியல் பிரிவில் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார். இவர் 8ம் வகுப்பில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதி, 6 மாதங்களுக்கு பின், 9ம் வகுப்பில் க.பொ.த உயர் தர வணிகவியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார். இதற்கமைய உயர்தர பிரிவில் இவர் மூன்று B சித்திகளை பெற்றுள்ளார். இதன்படி அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நுழைவதற்குத் தகுதி பெற்றுள்ளார். இதன் காரணமாக தேவும் சனஹாஸ் ரண்சிங்கவை ஊர்வலமாக வரவேற்கும் நிகழ்வு நேற்று(05.12.2022) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றுள்ளது. முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தேவம் குருகுல…
The post இலங்கையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 9ஆம் தர மாணவன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 9ஆம் தர மாணவன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
