பாம்புகள் வாழ்விடமாக மாறும் பதுளை மாவட்டம்!
6 view
பதுளை மாவட்டம், மடுல்சீம பொலிஸ் பிரிவில் 14 அடி மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் மடுல்சீம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எக்கிரிய பகுதியில் உள்ள வயல் ஒன்றில் குறித்த பாம்பை லுணுகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த மலைப்பாம்பு அப்பகுதி மக்களால் உயிரோடு பிடிக்கப்பட்டு எக்கிரிய காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது. இந்த பாம்பு தனது குட்டிகளை குறித்த இடத்தில் விட்டு சென்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. இது அப்பகுதி மக்களை அச்சத்தை ஆக்கியுள்ளது. மேலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பதுளை வைத்தியசாலை ஒன்றில் 25 நாகப்பாம்பு குட்டிகளும் ஒரு தாய் பாம்பையும் வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் நோயாளர்கள் இணைந்து வைத்தியசாலையின் பின்புறத்தில் இருந்து பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் பதுளை மாவட்டத்தில் இடம் பெறுவது மக்கள் மனதில் ஒரு பீதியை வரவழைத்துள்ளது.
The post பாம்புகள் வாழ்விடமாக மாறும் பதுளை மாவட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாம்புகள் வாழ்விடமாக மாறும் பதுளை மாவட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
