கொட்டகலை பிரதேச சபைக்கு இன்னும் ஒரு விருது!
7 view
வருடாந்தம் இலங்கை அரச நிதி கணக்காய்வாளர் சங்கம் மற்றும் இலங்கை பட்டய கணக்காய்வாளர் நிறுவனம் என்பன இணைந்து நடாத்தும் சிறந்த கணக்காய்வு அறிக்கை மற்றும் கணக்கு விபரங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 2022.12.02 ஆம் திகதி பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 2021 ஆம் ஆண்டுக்கான சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு விபரங்களுக்காக நுவரெலியா மாவட்டத்தில் கொட்டக்கலை பிரதேச சபை விருதினை பெற்றுக் கொண்டது. குறித்து விருதினை கொட்டக்கலை பிரதேச சபை மட்டுமே பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. குறித்த விருதினை பெற்றுக் கொண்டதற்காக கொட்டக்கலை பிரதேச சபையின் தலைவர் ராஜாமணி பிரசாத் அவர்கள் பிரதேச சபையில் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
The post கொட்டகலை பிரதேச சபைக்கு இன்னும் ஒரு விருது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொட்டகலை பிரதேச சபைக்கு இன்னும் ஒரு விருது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
