மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை

7 view
அக்மீமன – மாதொல பிரதேசத்தில் மனைவியைக் கொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கழுத்தில் தாக்கி கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இக்கொலைச் சம்பவம் இன்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலம் வீட்டின் சமையலறையிலும் கணவரின் சடலம் வீட்டின் அறையொன்றிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
The post மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース