கார்த்திகை தீபத்திருவிழா: வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருவண்ணாமலை கோவில்
21 view
திருவண்ணாமலை, டிச 05 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது. பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் சுமார் 12 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் குவிக்கப்பட்டுள்ளனர். கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் உள்ளிட்ட இடங்களில்…
The post கார்த்திகை தீபத்திருவிழா: வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருவண்ணாமலை கோவில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கார்த்திகை தீபத்திருவிழா: வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருவண்ணாமலை கோவில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
