கோக்கைன் போதைப்பொருள் இந்தியாவிற்குள் வரத்தொடங்கியுள்ளது: நிர்மலா சீதாராமன்
7 view
புதுடெல்லி, டிச 05 கோக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இந்தியாவிற்குள் வரத் தொடங்கியுள்ளன. நாட்டிற்குள் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை பெருமளவில் கடத்தும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை அமலாக்க முகமைகள் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இன்று டெல்லியில் நடைபெற்ற வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் (டிஆர்ஐ) 65-வது நிறுவன தின விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:- கடத்தல்காரர்கள் உங்களை விட புத்திசாலிகள் அல்ல என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்குகள் ஒவ்வொன்றும், ஆரம்ப கட்டத்திலேயே முடிவுக்கு வர வேண்டும். கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். கடினமாக உழைத்து, போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஜி-20 மாநாட்டிற்கு தலைமை வகிக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. நிதி நடவடிக்கை பணிக்குழு போன்ற நிறுவனங்கள் எந்த வகையான…
The post கோக்கைன் போதைப்பொருள் இந்தியாவிற்குள் வரத்தொடங்கியுள்ளது: நிர்மலா சீதாராமன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோக்கைன் போதைப்பொருள் இந்தியாவிற்குள் வரத்தொடங்கியுள்ளது: நிர்மலா சீதாராமன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
