அரபு கல்லூரியின் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முஜிபுர் ரஹ்மான்
7 view
வக்பு சட்டத்தின் கீழ் இருக்கும் கபூரிய்யா அரபுக் கல்லூரியின் சொத்துக்களை ஆக்கிரமிக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். அதனால் வக்பு சட்டத்தின் கீழ் இருக்கும் சொத்துக்களை பாதுகாக்க நீதி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (டிச. 05) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நம்பிக்கையாளர் சட்டம் தொடர்பாகவும் வக்பு சட்டம் தொடர்பாகவும் முஸ்லிம் சமூகத்துக்குள் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது. குறிப்பாக மஹரகம கபூரிய்யா அரபுக்கல்லூரி தொடர்பாகவும் அதன் வக்பு சட்டம் தொடர்பாகவும் பாரியதொரு கலந்துரையாடல் முஸ்லிம் சமூகத்தில் இடம்பெற்று வருகின்றது. கபூரிய்ய அரபு கல்லூரி அன்று இருந்த முஸ்லிம் தலைவர்களால் முஸ்லிம் சமூகத்துக்காக…
The post அரபு கல்லூரியின் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முஜிபுர் ரஹ்மான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரபு கல்லூரியின் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முஜிபுர் ரஹ்மான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
