இலங்கையில் டொலர்களுக்கு விற்பனையாகும் வீடுகள்! இதுவரை கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?
6 view
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு டொலர்களுக்கு வீடு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை ஆறு வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இந்த வீடுகளை டுபாய், அமெரிக்கா, கனடா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாங்கியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொள்வனவுக்காக கடந்த இரண்டு மாதங்களில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் வெளிநாட்டு நாணயக் கணக்கில் 276,650 அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், குறிப்பிட்ட டொலர் தொகையை ஒரே நேரத்தில் செலுத்தினால் 10 சதவீதம் விலைக்கழிவும் பெறுவார்கள். பன்னிபிட்டிய, வீரமாவத்தையில் அமைந்துள்ள வியத்புர வீடமைப்புத் தொகுதியிலிருந்து இந்த வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்னும் பத்து வீடுகளை வாங்க வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதன்படி, டொலர்களுக்கு வீடுகளை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ்…
The post இலங்கையில் டொலர்களுக்கு விற்பனையாகும் வீடுகள்! இதுவரை கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் டொலர்களுக்கு விற்பனையாகும் வீடுகள்! இதுவரை கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
