கின்னஸ் சாதனை படைத்த அம்பாறைச் சிறுமி கௌரவிப்பு!
26 view
அம்பாறை மருதமுனையைச் சேர்ந்த ஸர்ஜுன் அக்மல்இ பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் புதல்வியான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலை நகரங்களை வெறுமனே இரண்டு நிமிடத்தில் மிக வேகமாக கூறி உலக சாதனை புத்தகத்தில் (international book of world record) தனது பெயரை பதிவு செய்துள்ளார். உலகின் 120 நாடுகளின் தலை நகரங்களை வெறும் இரண்டு நிமிடத்தில் கூறிய உலகின் முதலாவது சிறுமியாக தனது பெற்றோருக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்துத்துள்ளார். உலக சாதனை புத்தக நிறுவனம் இச்சிறுமியின் திறமையையும், அதீத நினைவாற்றலையும் பரிசீலனை செய்து உலக சாதனை சிறுமியாக அறிவித்து இவருக்கான இலட்சினை,பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவித்துள்ளது. தனது இரண்டரை வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மின்ஹத் லமி மருதமுனை வரலாற்றில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த முதலாவது சாதனை சிறுமியாவார். இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திய இச் சிறுமியை…
The post கின்னஸ் சாதனை படைத்த அம்பாறைச் சிறுமி கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கின்னஸ் சாதனை படைத்த அம்பாறைச் சிறுமி கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
