2021 (2022) GCE O/L பரீட்சையில் ஒரே தடவையில் சித்தியடைந்த மாணவர்களுக்காக ஜனாதிபதியின் திட்டம்
15 view
2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதல் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டத்திற்கு, தகுதியுடைய மாணவ, மாணவிகளை விண்ணப்பிகக் கோரி ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கடந்த 30 ஆம் திகதி (30.11.2022) கல்வியமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். அதற்கமைய புலமைப்பரிசில் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள், மாதந்த குடும்ப வருமானமாக 75,000/- ரூபாவிற்கு குறைந்தவராகவும், அரசாங்க பாடசாலையில் அல்லது எவ்வித கட்டணமும் அறவிடப்படாத பாடசாலையில் கல்வி கற்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். .மேலும் விண்ணப்பதாரர்கள் 2021 (2022) ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதல் முறையாக தோற்றியிருப்பதுடன் ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள க.பொ.த…
The post 2021 (2022) GCE O/L பரீட்சையில் ஒரே தடவையில் சித்தியடைந்த மாணவர்களுக்காக ஜனாதிபதியின் திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2021 (2022) GCE O/L பரீட்சையில் ஒரே தடவையில் சித்தியடைந்த மாணவர்களுக்காக ஜனாதிபதியின் திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
