ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தமை சரியான தெரிவு- பஸில் பெருமிதம்!
6 view
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமை சரியான தெரிவு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். சகல கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் சுதந்திரமாக அரசியல் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தாம் கொண்டிருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் தற்பொழுது அவ்வாறானதொரு சூழல் காணப்படுவதாகவும், மேலும், அனைத்து தரப்பினரும் சுதந்திரமாக அரசியல் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (05) முற்பகல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக மையத்தில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அனைத்து தொழில்நுட்ப வசதிகள், பதிவு வசதிகள், மையப்படுத்தப்பட்ட விநியோக கூறுகள் மற்றும் பிற நவீன கூறுகளுடன் இலங்கையில் ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமான முதல் ஊடக செயற்பாட்டு…
The post ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தமை சரியான தெரிவு- பஸில் பெருமிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தமை சரியான தெரிவு- பஸில் பெருமிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
