ஷானி அபேசேகரவிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவாதம்!

12 view
கொழும்பு,டிச 05 தற்போதுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமென சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். தமக்கும் அவரது குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பு வழங்குமாறு கோரி ஷானி அபயசேகர தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபை சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய இந்த உறுதிமொழியை வழங்கினார். குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபையின் உத்தரவுகளுக்கு இணங்க, தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்தப் பாதுகாப்பை வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடுமாறு ஷானி அபேசேகர தனது ரிட் மனுவில் கோரியுள்ளார்.குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரின் பாதுகாப்பிற்காக இரண்டு ஆயுதம் தாங்கிய பொலிஸாரும், ஷானி அபேசேகரவின் இல்லத்தின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஏஎஸ்ஜி அபேசூரிய…
The post ஷானி அபேசேகரவிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவாதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース