பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 74 ஓட்டங்களால் வெற்றி
13 view
பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ,74 ஓட்டங்களால் வெற்றியீட்டியது, பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் நடைபெற்ற இப்போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 657 ஓட்டங்களைக் குவித்திருந்தது பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 579 ஓட்டங்களைக் குவிதது,இங்கிலாந்து அணி 2 ஆவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ஓட்டங்களைப் பெற்றநிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு வெறறி இலக்காக 343 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது,4 ஆவது நாள் ஆட்டமுடிவின்போது அவ்வணி 2 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தது,போட்டியின் 5 ஆவது நாளான இன்று பாகிஸ்தான் அணி 268 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. இதனால் 74 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றியீட்டியது.இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் ஜேம்ஸ் அண்டர்சன் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், ஒலீ ரொபின்சன் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து தற்போது :0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது.
The post பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 74 ஓட்டங்களால் வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 74 ஓட்டங்களால் வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
