தமிழ்நாட்டுக்கும் – யாழ்ப்பாணத்துக்கும் இடையே கப்பல் சேவை!
10 view
வட மாகாணத்திற்கும் -தமிழ்நாட்டிற்கும் இடையில் கப்பல் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் Sunday times க்கு தெரிவித்தார்.இந்த திட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் 500 பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதிகள் கப்பல் பயன்படுத்துவது குறித்து ஆராயப்படவுள்ளது. டிசம்பர் 12 முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறுகையில், சென்னையில் இருந்து வாரத்திற்கு ஐந்து விமான சேவைகள் கோரப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளை இலங்கையில் உள்ள கண்டி, நுவரெலியா மற்றும் நாட்டின் தென் பகுதிகள் உட்பட பயணிக்கும் வகையில் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக சுற்றுலாத்துறை அதிகாரிகளும் ஈடுபடுவார்கள் என்றார். இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்பும் குடும்பங்களுக்கு உதவும், வகையில் கடற்கரைக்கு முன்னால்…
The post தமிழ்நாட்டுக்கும் – யாழ்ப்பாணத்துக்கும் இடையே கப்பல் சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ்நாட்டுக்கும் – யாழ்ப்பாணத்துக்கும் இடையே கப்பல் சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
