சமத்துவ மக்கள் முன்னணி அரசியல் அமைப்பாக செயற்படும்-வை.எல்.எம் யூசுப் உறுதி!

15 view
சமத்துவ மக்கள் முன்னணி எதிர்காலத்தில் அரசியல் அமைப்பாக செயல்படுவதற்கான காலம் தற்போது ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் ஸ்தாபக தலைவர் டொக்டர் வை.எல்.எம். யூசுப் தெரிவித்தார். கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பல முக்கிய ஊர்களினதும் சிவில் சமூகத்தினரை அழைத்து ஏற்பாடு செய்த “முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார கல்வி, கலாசார விடயங்களில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும் அதற்கான கலந்துரையாடலும்” எனும் தலைப்பிலான விசேட ஒன்றுகூடல் நேற்று (04) கல்முனையில் தனியார் வரவேற்பு மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். இதில் டொக்டர் .யூசுப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் உரையாற்றினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அஷ் செய்க் டொக்டர் உவைஸ் (நளிமி), சொப்ர் வெயா கென்சல்டன் எம்.எம்.நஸ்மி, பொறியியலாளர் எம்.எம்.ஏ.சித்திக் உட்பட பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள் என பலர் கலந்து கொண்டனர்
The post சமத்துவ மக்கள் முன்னணி அரசியல் அமைப்பாக செயற்படும்-வை.எல்.எம் யூசுப் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース