கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்!
15 view
வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. டிசம்பர் 9ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னர் பிற்பகல் 2 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடமாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகவும் நிர்வாக ஆளுமையற்ற தன்மை காரணமாகவும் குறித்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம். வடமாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வடமாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 100 பக்க முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தோம். அதற்கு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர். குறித்த விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை கேட்டபோதும் அது இதுவரை எமக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. முறைப்பாட்டை வழங்கி அண்ணளவாக ஒரு வருடமாகிய போதும் கூட…
The post கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
