மகாவலி திட்டத்தின் பெயரால் காணிகளை அபகரிப்பதற்கு எதிராக கிரானில் ஆர்ப்பாட்டம்!
14 view
மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி “பி” வலயத்தின் வலது கரை காணிகளை மகாவலி திட்டத்தின் பெயரால் அபகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு கிரானில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்திற்கு செல்லும் கிரான்-புலிபாய்ந்தகல் பிரதான வீதியை மறித்து இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தார்கள். கிரான்-புலிபாய்ந்தகல் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டதுடன் பிரதேச செயலாளர் செல்வதை தடுத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எமது பூர்வீக காணிகளை கையகப்படுத்தும் நோக்கத்தினை மகாவலியே விட்டுவிடு,காணி அபகரிப்பினை உடன் நிறுத்து,காணி அபகரிப்பு என்னும் பெயரில் தமிழ் பேசும் பூர்வீக மக்களின் வாழ்விடங்களை அபகரிக்கும் சதித்திட்டத்தினை நிறுத்து,சிறுபான்மை இனங்களும் இந்த நாட்டின் இனங்களே,கிழக்கு மாகாண காணிகளை பறிப்பதன் நோக்கம் என்ன போன்ற சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர். மகாவலி திட்டத்தின் கீழ்…
The post மகாவலி திட்டத்தின் பெயரால் காணிகளை அபகரிப்பதற்கு எதிராக கிரானில் ஆர்ப்பாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகாவலி திட்டத்தின் பெயரால் காணிகளை அபகரிப்பதற்கு எதிராக கிரானில் ஆர்ப்பாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
