திடீரென தோட்டத்துக்குள் குதித்த விவசாய அமைச்சர்
6 view
அனுராதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் சோளப்பயிர்களில் படைப்புழு நோய் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சோளத் தோட்டங்களை பார்வையிடுவதற்காக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று சென்றுள்ளார். அநுராதபுரம், சீப்புக்குளம், விருப்பங்குளம் ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சில சோளத் தோட்டங்களை ,விவசாய அதிகாரிகள் மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் பார்வையிட்டனர். படைப் புழுக்களின் தொற்றுநோய் நிலைமை ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் இருந்தாலும், தொற்றுநோய் நிலைமை தற்போது கட்டுப்படுத்தக்கூடிய மட்டத்தில் இருப்பதாக விவசாய அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். முதற்கட்டமாக இரசாயனங்கள் பயன்படுத்தாமல் உயிரியல் பூச்சி தடுப்பு முறைகளை பயன்படுத்தவும், படை புழு பாதிப்பு தடுப்பு குறித்த தொழில்நுட்ப அறிவை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை வேளாண் துறை தற்போது ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக பூச்சியின் தொற்று நிலைமை அதிகரித்துள்ளதாகவும், தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை பூச்சியின் பரவலுக்கு இடையூறாக இருப்பதாகவும் விவசாய திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். விவசாயிகளிடம்…
The post திடீரென தோட்டத்துக்குள் குதித்த விவசாய அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திடீரென தோட்டத்துக்குள் குதித்த விவசாய அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
