தமிழரின் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தும் 'தமிழ் மரபுத் திங்கள்' நிகழ்வுகள்
7 view
ஸ்காபரோவில் அமைந்திருக்கும் தமிழ்கல்விப் பணிமனை முன்றலில் ஜனவரி 1ம் தினதி சனிக்கிழமை மரபுத் திங்கள் என வரையறுக்கப்பட்ட மரபுசார் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதுதொடர்பில் ‘தமிழ் மரபுரிமை நடுவம்’ அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது, மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்ட, தமிழரின் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தவல்ல ‘தமிழ் மரபுத் திங்கள்’ என்ற அரிய வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம். அதற்கமைய நாம் ஆண்டுதோறும் மரபுசார் நிகழ்வுகளை முன்னடுத்து வருகின்றோம். மரபுத் திங்கள் என வரையறுக்கப்பட்ட நாள்களில் எமது சமூகம் நாட்டின் பல பகுதிகளிலும் மரபுசார் நிகழ்வுகளை முன்னெடுப்பது வழமை. பண்பாடு, மரபுகள் சார்ந்த விழிப்புணர்வை யாவருக்கும் ஏற்படுத்தும் வகையில் நிகழ்வுகளைத் திட்டமிட்டு வடிவமைத்துப் பயன்மிக்கதாக்குவதே தமிழ் மரபுரிமை நடுவத்தின் முதன்மை இலக்காகும். 2023 – மரபுசார் நிகழ்வுகளுக்கான கருப்பொருள்: இவ்வாண்டுக்கான கருப்பொருளாகத் ‘தமிழிசைத் தொன்மை – புரிதலும் பேணலும்’ என்ற பொருண்மைத் தொடர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மரபுரிமை நிகழ்வுகளை முன்னெடுக்கும் அமைப்புகள் யாவும்…
The post தமிழரின் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தும் 'தமிழ் மரபுத் திங்கள்' நிகழ்வுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரின் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தும் 'தமிழ் மரபுத் திங்கள்' நிகழ்வுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
