பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் தெல்லிப்பளையில் ஒருவர் கைது!
6 view
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட 2ஆயிரத்து 640 வெளிநாட்டு சிகரெட் உடன் 39 வயதுடைய நபர் ஒருவர் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வரிகள் விதிக்கப்பாடாமல் 132 சிகரெட் பெட்டிகளை இலங்கைக்குள் கடத்தி அதனை உடைமையில் வைத்திருந்த நிலையிலையே இவர் கைது செய்யப்பட்டார், தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
The post பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் தெல்லிப்பளையில் ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் தெல்லிப்பளையில் ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
