யாழில் பெருந்தொகை வெளிநாட்டு சிகரெட்களை வைத்திருந்தவர் சிக்கினார்!
6 view
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட 2640 வெளிநாட்டு சிகரெட்டுடன் 39 வயதுடைய நபர் ஒருவரை தெல்லிப்பளை பொலிஸார் நேற்றையதினம் கைது செய்துள்ளனர். வரிகள் செலுத்தாமல் 132 சிகரெட் பெட்டிகளை இலங்கைக்குள் கடத்தி அதனை உடைமையில் வைத்திருந்த நிலையிலையே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் டி . தியான் இந்திக்க சில்வா தலைமையிலான குழுவினரே கைது நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், மேலதிக விசாரணைகளை அடுத்து சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
The post யாழில் பெருந்தொகை வெளிநாட்டு சிகரெட்களை வைத்திருந்தவர் சிக்கினார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பெருந்தொகை வெளிநாட்டு சிகரெட்களை வைத்திருந்தவர் சிக்கினார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
