மாணவர்களின் காலணிகளை தைத்துக் கொடுக்கும் ஆசிரியர்: குவியும் பாராட்டுக்கள்!
16 view
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தற்போதைய வரி அதிகரிப்பால் உணவுப்பொருட்கள், பல பாடசாலைப் பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது. இதனால் பெரும்பான்மையான பிள்ளைகள் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெற்றோர் இருவருமே வேலை செய்யும் குடும்பங்கள் கூட தமது பிள்ளைகளுக்கு சமச்சீர் உணவு, எழுதுபொருட்கள், உடைகள் மற்றும் காலணிகளை வழங்குவதில் சிரமப்படும் வேளையில், வாரியபொல மிரிஹானேகம கனிஷ்ட வித்தியாலயத்தில் ஒரு ஆசிரியர் மாணவர்களின் பழுதடைந்த சப்பாத்துக்களை தைத்து கொடுக்கும் பணியை செய்துவருகின்றார். இதனால் சப்பாத்துக்களை அணிந்து பாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்பாடசாலையின் சிங்கள மற்றும் கலைப் பாட ஆசிரியரான மஹிந்த குமாரகந்த, இறுதியாக 6ஆம் வகுப்பு மாணவனை தனது வகுப்பு ஒன்றில் நிறுத்தி அவனது சப்பாத்துக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டுள்ளார். மாணவர் எதிர்பார்த்தது போலவே, தனது சோடி காலணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவித்ததுடன், அவரது தாத்தா, பாட்டிக்கு சப்பாத்தினை வாங்குவதற்கு பணம் இல்லாததால், …
The post மாணவர்களின் காலணிகளை தைத்துக் கொடுக்கும் ஆசிரியர்: குவியும் பாராட்டுக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவர்களின் காலணிகளை தைத்துக் கொடுக்கும் ஆசிரியர்: குவியும் பாராட்டுக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
