பாடசாலையின் கல்வி நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
13 view
பாடசாலையின் கல்வி நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று(05.12.2022)ஆரம்பமாகின்றது. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று முதல் மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மூன்றாம் தவணைக்கான முதற்கட்டம் இன்று(5) முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நத்தார் பண்டிகை காரணமாக எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதேவேளை உயர்தரப் பரீட்சை காரணமாக எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி முதல் பெப்ரவரி 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.…
The post பாடசாலையின் கல்வி நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலையின் கல்வி நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
