இலங்கையரொருவர் அமெரிக்க பொலிஸாரால் சுட்டுக்கொலை! உறவினர்கள் வெளியிட்ட தகவல்
7 view
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின் நகரில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தொழில்நுட்ப துறையில் தொழில் புரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 33 வயதுடைய ராஜ் என்பவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கடந்த நவம்பர் 15 ஆம் திகதி தொழில் முடித்து வீடு திரும்பிய போதே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பெற்றோர் ஊடகங்களுக்கு பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளமை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டில் பொருட்கள் கொள்ளையிடப்படுவதாக சந்தேகப்பட்ட ராஜ் துப்பாக்கியுடன் வீட்டின் வாசல் பகுதிக்கு வந்த நிலையில் திடீரென சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரியொருவர், ராஜின் கையில் இருந்த துப்பாக்கியை கீழே இறக்குமாறு உத்தரவிட்டு உடனே துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக ராஜின் உறவினர்கள் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். ஆயுதத்தை நிலத்தில் போடுவதற்கு நியாயமான கால அவகாசம்…
The post இலங்கையரொருவர் அமெரிக்க பொலிஸாரால் சுட்டுக்கொலை! உறவினர்கள் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையரொருவர் அமெரிக்க பொலிஸாரால் சுட்டுக்கொலை! உறவினர்கள் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
