பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் அறவிடப்படும் கட்டணம் மூன்று மடங்காக அதிகரிப்பு

7 view
2022ஆம் ஆண்டில் பாடசாலைகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு இதுவரை பெற்றுக்கொடுக்கப்படாமையினால் அடுத்த வருடத்திற்காக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் அறவிடப்படும் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, அதிபர்களினதும், ஆசிரியர்களினதும் தரவுகளை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஆசிரிய – அதிபர் இடம்மாற்றம், பதவி உயர்வு உள்ளிட்ட சகல விடயதானங்களையும் தொழிநுட்ப முறைமையின் அடிப்படையில் உள்ளடக்குவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிநுட்ப ரீதியிலான கல்வி முறைமையினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் அமைச்சரவை அனுமதியினை பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம். ஆயிரம் பாடசாலைகளுக்கு புதிதாக இணைய வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக பாதீட்டில் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் எந்தவொரு பாடசாலையும் தனித்துவிடப்படாமல் அனைத்தையும்…
The post பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் அறவிடப்படும் கட்டணம் மூன்று மடங்காக அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース