செனகலை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து
8 view
தோகா,டிச 05 கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து, செனகல் அணிகள் மோதின. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார். 48-வது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 2-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் புகாயோ சகா ஒரு கோல் அடித்தார். இறுதியில், இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியறது. செனகல் அணி வீரர்களால் ஒரு கோல் கூட முடியவில்லை.
The post செனகலை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செனகலை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
