தலத்தில் தியானம் செய்து கொண்டிருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்த நபர்
30 view
போபால், டிச 04 மத்தியபிரதேச மாநிலம் கத்னி மாவட்டத்தில் மருந்து கடை நடத்தி வருபவர் ராஜேஷ் மிஹனி. இவர் வாரவாரம் வியாழக்கிழமை அதேபகுதியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலமான சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், ராஜேஷ் கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல இந்து மத வழிபாட்டு தலமான சாய்பாபா வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளார். அங்கு வழிபாடு நடத்திவிட்டு கோவிலில் தியானம் செய்ய அமர்ந்திருந்தார். அப்போது, திடீரென ராஜேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் தியானத்தில் இருந்தபோதே அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். ராஜேஷ் வெகுநேரமாக தியான நிலையில் இருந்ததை கண்ட சிலர் அவரை எழுப்ப முயற்சித்துள்ளனர். அப்போது, அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ராஜேஷை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். வழிபாட்டு தலத்தில் தியானம் செய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட மாரடைப்பால் தியானத்திலேயே ராஜேஷின் உயிர் பிரிந்துவிட்டதாக…
The post தலத்தில் தியானம் செய்து கொண்டிருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்த நபர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தலத்தில் தியானம் செய்து கொண்டிருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்த நபர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
