வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகல்: இதுதான் காரணம்
31 view
வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு சூர்யா மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது- வணக்கம். என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான்…
The post வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகல்: இதுதான் காரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகல்: இதுதான் காரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
