மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டமைப்பு பேச விரும்புவதை வரவேற்கின்றோம்! – மனோ தெரிவிப்பு
13 view
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அனைத்து கட்சிகளுடன் பேச விரும்புகின்றேன் எனக் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விடுத்த அழைப்பை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்நிலையில், ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாட விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நண்பர் சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது பற்றி கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களான நண்பர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., நண்பர் சித்தார்த்தன் எம்.பி. ஆகியோரும் என்னிடம் உரையாடியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களின் இந்த நிலைப்பாட்டை தமிழ் முற்போக்குக் கூட்டணி வரவேற்கின்றது.” – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது பற்றி மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது:- “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பு மற்றும் கருத்து இன்னமும் முழுமையாகத் தெளிவுபட எமக்குக் கிடைக்கவில்லை. நாடாளுமன்றக் கருத்துப் பகிர்வுடன் அது நிற்கின்றது. மாகாண சபை, பதின்மூன்று ‘பிளஸ்’ என்று ஆரம்பித்து…
The post மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டமைப்பு பேச விரும்புவதை வரவேற்கின்றோம்! – மனோ தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டமைப்பு பேச விரும்புவதை வரவேற்கின்றோம்! – மனோ தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
