பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு?
29 view
எதிர்வரும் 9ஆம் திகதி வரி திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட மாட்டாது எனவும் அனைத்துப் பொருட்களின் விலைகள் உயரும் என கூறப்படுவது பொய்யானது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல மொரவத்தை பிரதேசத்தில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வரி சீராய்வு திருத்தச்சட்டம் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறதுஇ அனைத்து பொருட்களின் விலையும் உயரும் என்பது உண்மையா? எழுப்பிய கேள்விக்கு, ‘வரி திருத்த சட்டம் வரும் 9ம் திகதி தாக்கல் செய்யப்படாது. அடுத்த வாரம் 13ம் திகதி அல்லது வேறு ஏதாவது ஒரு நாளில் இருக்கலாம். இரண்டாவது விடயம்இ உத்தேச திருத்தங்கள் எதுவும் இந்த வருட வரவு செலவுத் திட்ட ஆவணத்துடன் தொடர்புடையவை அல்ல. அவை இடைக்கால வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் இருந்த சில விடயங்கள் அல்லது இந்த வரவு செலவுத் திட்ட ஆவணத்திற்கு…
The post பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
