ஒரே நபரை திருமணம் செய்த இரட்டை சகோதரிகள்
6 view
மும்பை, டிச 04 மராட்டிய மாநிலம் சோலாபூர் மாவட்டம் மல்ஷிரஸ் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் பிங்கி , ரிங்கி. 36 வயதான இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவர். பிங்கி, ரிங்கி சகோதரிகள் ஐடி துறையில் இன்ஜினியராக பணியாற்றி வருகின்றனர். இரட்டை சகோதரிகளான இருவரும் சிறு வயது முதலே ஒன்றாக வாழ்ந்து வருவதால் இறப்பு வரை சேர்ந்தே வாழவேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதேபோல், ஒரே நபரை திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ வேண்டும் என்றும் சகோதரிகள் முடிவு செய்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் பிங்கி, ரிங்கி சகோதரிகளின் தந்தை உயிரிழந்துவிட்டார். மேலும், சகோதரிகளின் தாயாருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதேவேளை பிங்கி, ரிங்கி சகோதரிகள் வசித்து வரும் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தவர் அதுல். ஒரே பகுதி என்பதால் பிங்கி, ரிங்கி சகோதரிகளுக்கும் அதுலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட பிங்கி, ரிங்கியின் தாயாரை அதுல் தனது…
The post ஒரே நபரை திருமணம் செய்த இரட்டை சகோதரிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரே நபரை திருமணம் செய்த இரட்டை சகோதரிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
