இன, மத பேதங்களை கடந்து இலங்கைக்காக அனைவரும் ஒன்றிணைவோம் – ஜனாதிபதி அழைப்பு
13 view
இன, மத பேதங்களை கடந்து ஐக்கிய இலங்கைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணியாகி 50 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று (3) இரவு ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதிக்கான கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்மூலம் நாடடின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளை தவிர்த்துக் கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டதை போன்று நாட்டிலுள்ள சட்டத்தரணிகளும் பங்களிப்புச் செய்தால் அந்த இலக்கை அடைய முடியும். ஒட்டுமொத்த அமைப்பு முறையும் இளைய தலைமுறையினரால் கேள்விக்குட்படுத்தப்படும்போது நாம் அனைவரும் சவாலுக்கு உள்ளாக நேரிடுகிறது. இது பொருளாதார சவாலிலும் பார்க்க பாரதுரமானது. கடந்த கால காயங்களை ஆற்றுவதா அல்லது அதனை மேலும் வளரவிடுவதா என தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது நாட்டுக்கு கிடைத்துள்ளது. நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்காமல் இன, மத வேறுபாடு…
The post இன, மத பேதங்களை கடந்து இலங்கைக்காக அனைவரும் ஒன்றிணைவோம் – ஜனாதிபதி அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன, மத பேதங்களை கடந்து இலங்கைக்காக அனைவரும் ஒன்றிணைவோம் – ஜனாதிபதி அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
