44 பவுண் தங்கம் திருட்டு தொடர்பில் விசாரணை ஆரம்பம்
6 view
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தின் சான்றுப் பொருட்கள் களஞ்சியசாலையில், இரண்டு வழக்குகளுடன் தொடர்புடைய 44 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வழக்கு சான்றுப் பொருட்களின் களஞ்சியசாலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் உள்ள இரண்டு பொலிஸ் நிலையங்களுடன் தொடர்பான வழக்கு சான்றுப் பொருட்கள் இந்தக் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The post 44 பவுண் தங்கம் திருட்டு தொடர்பில் விசாரணை ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 44 பவுண் தங்கம் திருட்டு தொடர்பில் விசாரணை ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
