ஹப்புத்தளையில் சுற்றுலா சென்ற 20 பேர் மீது குளவி கொட்டு
6 view
ஹப்புதளை – தம்பேத்தன்ன – லிப்டன்ஸ் சீட் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த சுமார் 20 பேர் இன்று முற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் ஹப்புத்தளை – பங்கெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 17 பேரும் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மூவருமே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 5 வயதுக்கு குறைவான இரு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
The post ஹப்புத்தளையில் சுற்றுலா சென்ற 20 பேர் மீது குளவி கொட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹப்புத்தளையில் சுற்றுலா சென்ற 20 பேர் மீது குளவி கொட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
