சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் மன்னாரில் திறந்து வைப்பு!
6 view
மன்னாரில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) I.S.R.C தனியார் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மடுக்கரைப் பகுதியில் சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களின் வேண்டு கோளின் பேரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் அமைக்கப்பட்டது. இந்நிகழ்வில் I.S.R.C நிறுவனத்தின் பணிப்பாளர் மொஹமட் சயாப், I.S.R.C நிறுவனத்தின் ஸ்தாபகரும் முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான ஜனாப் மிஹ்லார் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
The post சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் மன்னாரில் திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் மன்னாரில் திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
