முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை 164 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
6 view
பெர்த், டிச 04 ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 598 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித் இரட்டை சதம் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 283 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனை அடுத்து வெஸ்ட்இண்டீசுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 315 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 29 ரன்கள் எடுத்து இருந்தது. டேவிட் வார்னர் 17 ரன்னுடனும், லபுஸ்சேன் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 2 விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. 9-வது சதம் அடித்த லபுஸ்சேன் 104 ரன்களுடனும்,…
The post முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை 164 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை 164 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
