'வடை'க்குள் ஒளிந்து நின்ற கரப்பான்பூச்சி! யாழ். பிரபல சைவ உணவகத்தில் நடந்த சம்பவம்

6 view
யாழ். நகரில் பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்கப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்டமையினால் குறித்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – சிவன் கோவிலடியில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் இன்று காலை உழுந்து வடை ஒன்றினை வாங்கி உள்ளார். பின்னர், வீடு சென்று வடையை சாப்பிட்ட போது, வடைக்குள் கரப்பான் பூச்சி இருப்பது அவதானிக்கப்பட்டு, உடனடியாக யாழ்.மாநகர சபையின் சுகாதார பரிசோதர்களுக்கு குறித்த நபர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில், யாழ். மாநகர சபையின் சுகாதார பரிசோதர்கள், உடனடியாக குறித்த கடைக்கு விஜயம் மேற்கொண்டு, கடையை பரிசோதித்ததோடு, கடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
The post 'வடை'க்குள் ஒளிந்து நின்ற கரப்பான்பூச்சி! யாழ். பிரபல சைவ உணவகத்தில் நடந்த சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース