மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பெரியப்பா
6 view
அநுராதபுரம், கல்னேவ – ஹுரிகஸ்வெவ பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், குறித்த சிறுமியின் பெரிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர்கள், ஹுரிகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், குற்றப் விசாரணைப் பிரிவினர் மற்றும் விசேட பணியக அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது, 60 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீண்ட நாட்களாக சிறுமியின் வீட்டில் தங்கியிருந்ததாக பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த சிறுமியின் பெற்றோர் விவசாயத்திற்காக வீட்டிலிருந்து வெளியே செல்லும் சந்தர்ப்பத்தில் சந்தேகநபரால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சிறுமி சற்று உளநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரை மருத்துவ பரிசோதனைக்காக அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கு பொலிஸார் நடவடிககை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பெரியப்பா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பெரியப்பா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
