சிறந்த மேதை சந்திரிகாவை எவரும் தூக்கி வீச முடியாது!
6 view
“முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஆற்றலும் அனுபவமும் கொண்ட சிறந்த மூத்த அரசியல்வாதி. அவரை எவரும் தூக்கி வீச முடியாது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்தார். சந்திரிகாவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சம்பிரதாயத்துக்கு அமையவே நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். சந்திரிகாவின் கட்சி உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சு.க. உறுப்பினர்கள் குழு ஒன்று நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்தனகல்ல பகுதியில் அமைந்துள்ள ஹொரகொல்ல, பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரின் அச்சிடப்பட்ட பதாகையைத் தரையில் வீசி தேங்காய்களையும் உடைத்து கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
The post சிறந்த மேதை சந்திரிகாவை எவரும் தூக்கி வீச முடியாது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறந்த மேதை சந்திரிகாவை எவரும் தூக்கி வீச முடியாது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
