டெல்லியில் மாநகராட்சிக்கு இன்று தேர்தல், குஜராத்தில் பிரசாரம் நிறைவு !
6 view
டெல்லியில் 250 தொகுதிகளை கொண்ட மாநகராட்சிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு 13 ஆயிரத்து 638 வாக்குச்சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 7 ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதேவேளை குஜராத்தில் 2ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்துள்ள நிலையில் 93 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை இடம்பெறவுள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 19 மாவட்டங்கள் உட்பட 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த முதலாம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
The post டெல்லியில் மாநகராட்சிக்கு இன்று தேர்தல், குஜராத்தில் பிரசாரம் நிறைவு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டெல்லியில் மாநகராட்சிக்கு இன்று தேர்தல், குஜராத்தில் பிரசாரம் நிறைவு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
