இலங்கையின் மஸ்கெலியா பிரதேசத்தில் விமானம் மோதி இன்றுடன் 48 வருடங்கள்
6 view
இலங்கையின் மஸ்கெலியா பிரதேசத்தில் அமைந்துள்ள சப்த கன்யா (நக்கில்ஸ் மலைத்தொடர்) சிகரத்தில் விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இடம்பெற்று இன்றுடன் (04) 48 வருடங்கள் ஆகின்றன. கடந்த அரை நூற்றாண்டில் இலங்கையில் இடம்பெற்ற மிக மோசமான அனர்த்தமாக இது கருதப்படுகிறது. இந்த சம்பவத்திலும் மலேசிய விமானம் ஒன்றே தொடர்புபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 1974 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி மலேசியாவில் இருந்து மக்கா நோக்கி புனிதயாத்திரை சென்ற யாத்திரிகர்களுடன் குறித்த விமானம் விபத்துக்குள்ளானது.கிழக்கு ஜாவாவின் ஜுவான்டா (Juanda) சர்வதேச விமான நிலையத்திலிருந்து 182 பயணிகள், விமானிகள் உட்பட 9 விமான பணியாளர்களுடன் பயணத்தை ஆரம்பித்த PH-MBH என்ற பதிவிலக்கத்தைக் கொண்ட McDonnell Douglas DC-8-55CF விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் நோக்கில் தாழ்வாக பறந்த போது எதிர்பாராதவிதமான அனர்த்தத்தை எதிர்கொண்டது.இந்த அசம்பாவிதத்தின் போது 191 பேரும் சப்த கன்யா மலையடிவாரத்தில் மண்ணுள் புதையுண்டதன் காரணமாக துரதிஷ்டவசமாக…
The post இலங்கையின் மஸ்கெலியா பிரதேசத்தில் விமானம் மோதி இன்றுடன் 48 வருடங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் மஸ்கெலியா பிரதேசத்தில் விமானம் மோதி இன்றுடன் 48 வருடங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
