இன்று நாட்டில் மோசமான காலநிலை!
6 view
வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது. நாட்டில் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் மற்றும் மேல்,சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை அல்லது பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேலைகளில் அப்ரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசப்படும். மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு குறித்த திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
The post இன்று நாட்டில் மோசமான காலநிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று நாட்டில் மோசமான காலநிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
