கால்பந்து ஜாம்பவான் பீலே ஐசியுவில் அனுமதி
5 view
பிரேசிலியா,டிச 04 தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (81). 1956ம் ஆண்டு தனது 15-வது வயதில் கால்பந்து விளையாட்டில் இறங்கி தொடர்ந்து 1974-ம் ஆண்டு வரை விளையாடிய பெருமை பெற்றவர். இதில், 6 பிரேசிலியன் லீக் பட்டங்களையும், 2 கோப்பா லிபர்டடோர்ஸ் பட்டங்களையும் வென்றுள்ளார். உலக கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்கு உரியவர். தனது அணிக்காக பீலே 643 கோல்களை அடித்து உள்ளார். பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிறிய கட்டி அகற்றப்பட்டது. இதன்பின், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதற்கிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா என்ற பகுதியில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளித்து வந்த…
The post கால்பந்து ஜாம்பவான் பீலே ஐசியுவில் அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கால்பந்து ஜாம்பவான் பீலே ஐசியுவில் அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
