எனது மரணத்துக்குத் நானே காரணம் – யாழில் கடிதம் எழுதிவைத்து விட்டு உயிரை மாய்த்துக்கொண்ட யுவதி!

6 view
யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் தவறான முடிவால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் பட்டம் பெற்ற தவராசா தர்ஷினி (வயது-25) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார். தனது மரணத்துக்குத் தானே காரணம் என்றும் பெற்றோரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறும் தனது தங்கைக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் அத்துடன் அக் கடிதத்தில் தொலைபேசி பாவனை தொடர்பிலும் தங்கைக்கு அறிவுரை கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடியதாகவும், பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றபோது பகிடிவதை காரணமாக மன உலைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஒன்றரை வருடத்திற்கு முன் இவருக்குப் பதிவுத் திருமணம் நடந்தது என்றும், தற்போது பெற்றோருடன் வசித்து வருகின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு…
The post எனது மரணத்துக்குத் நானே காரணம் – யாழில் கடிதம் எழுதிவைத்து விட்டு உயிரை மாய்த்துக்கொண்ட யுவதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース