வடமாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்து ஜனாதிபதிக்கு கடிதம்
40 view
யாழ்ப்பாணம்,டிச 03 நமது நிருபர் வடமாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்து இரண்டாவது தடவையாக வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபையால் 2017 ஆம் ஆண்டில் வடமாகாண சுற்றுலாத்துறை பணியக நியதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு அமுலில் இருக்கையில், அதே விடயத்தில் அதற்கு ஒத்ததான புதிய நியதிச்சட்டமொன்றை உருவாக்கிய ஆளுநரின் செயற்பாடு கேலிக்கூத்தானதாகும். ஏற்கனவே ஒரு நியதிச் சட்டம் அமுலில் இருந்தமை பற்றி, அதனைப் பிரதி பண்ணிய ஆளுநர் மிகத் தெளிவாக அறிந்திருந்தார் என்பது இதனால் வெளிப்படையாகியுள்ளது. ஆளுநரால் நியதிச் சட்டம் எனக் கூறப்படும் ஆவணத்தின் உள்ளடக்கம் 90 வீதம் மேலே குறிப்பிடப்பட்ட மாகாண சபையால் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டத்தை ஒத்ததாகவே உள்ளது. அதிலுள்ள முக்கிய…
The post வடமாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்து ஜனாதிபதிக்கு கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்து ஜனாதிபதிக்கு கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
