வெளி மருந்தகங்களில் மருந்துகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது: ஆறுதிருமுருகன்
29 view
யாழ்ப்பாணம்,டிச 03 தற்போது யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றது. அதேவேளை நாடு முழுவதும் பொருளாதாரப் பிரச்சினை இருந்தாலும் யாழ் மக்களின் பிரதான வைத்தியசாலைகளில் குறிப்பிட்ட மருந்துகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. அதேவேளை வைத்தியர்கள் மருந்துகளை வெளியே வாங்குமாறு எழுதிக் கொடுக்கின்றனர். அதேவேளை வெளி மருந்தகங்களில் மருந்துகளின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளன என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் தெரிவித்தார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,யாழ் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவையான அடிப்படை மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. வைத்தியசாலை தரப்பினர் இது தொடர்பில் அறிவித்திருக்கின்றனர். அதேவேளை நாட்டு மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் எங்களுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயங்களில் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சமூக நிறுவனங்களினூடாகவோ இந்த புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்லும் மக்களின் அவலநிலையை இன்னும் போக்கியதாக தெரியவில்லை.…
The post வெளி மருந்தகங்களில் மருந்துகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது: ஆறுதிருமுருகன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளி மருந்தகங்களில் மருந்துகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது: ஆறுதிருமுருகன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
