சீரான ஆம்புலன்ஸ் சேவை இன்மையால் அவதியுறும் நோயாளிகள்- வட்டு வைத்தியசாலையில் அவலம்!
11 view
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் தாங்கள் அவதியுறுவதாக வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில், அராலி, துணவி, முதலிய கோவில் சங்கரத்தை, சித்தங்கேணி, மூளாய், சுழிபுரம் மற்றும் பொன்னாலை பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் குறித்த வைத்தியசாலையில் சீரான ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லை. கடந்த 23.11.2022 அன்று இளம் குடும்பப்பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அதனைப் பார்த்த சிறுமி ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமுற்றிருந்தார். இந்நிலையில் குறித்த சிறுமியை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றவேளை அவருக்கு அங்கு முதலுதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு வைத்தியர்கள் கூறினர். அதற்கு நாங்கள், வைத்தியசாலை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லுமாறு கூறினோம். அதற்கு அவர்கள், வைத்தியசாலை ஆம்புலன் இல்லை என…
The post சீரான ஆம்புலன்ஸ் சேவை இன்மையால் அவதியுறும் நோயாளிகள்- வட்டு வைத்தியசாலையில் அவலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீரான ஆம்புலன்ஸ் சேவை இன்மையால் அவதியுறும் நோயாளிகள்- வட்டு வைத்தியசாலையில் அவலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
