மக்களின் பிரச்சினைகளை நேரில் சென்று ஆராயத் தயங்கும் தமிழ் எம்.பிக்கள்- ஆறுதிருமுருகன் கவலை!
6 view
தற்போது யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றது. அதேவேளை நாடு முழுவதும் பொருளாதாரப் பிரச்சினை இருந்தாலும் யாழ் மக்களின் பிரதான மருத்துவ நிலையங்களில் குறிப்பிட்ட மருந்துகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. அதேவேளை வைத்தியர்கள் மருந்துகளை வெளியே வாங்குமாறு எழுதிக் கொடுக்கின்றனர். அதேவேளை வெளி மருந்தகங்களில் மருந்துகளின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளன என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் ஆறுதிருமுருகன் தெரிவித்தார். யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், யாழ் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவையான அடிப்படை மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. வைத்தியசாலை தரப்பினர் இது தொடர்பில் அறிவித்திருக்கின்றனர். அதேவேளை நாட்டு மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் எங்களுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயங்களில் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சமூக நிறுவனங்களினூடாகவோ இந்த புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்லும் மக்களின் அவலநிலையை …
The post மக்களின் பிரச்சினைகளை நேரில் சென்று ஆராயத் தயங்கும் தமிழ் எம்.பிக்கள்- ஆறுதிருமுருகன் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களின் பிரச்சினைகளை நேரில் சென்று ஆராயத் தயங்கும் தமிழ் எம்.பிக்கள்- ஆறுதிருமுருகன் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
