நுவரெலியா வீதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!
7 view
ஹட்டன் – நுவரெலியா வீதியில் குடாகம பகுதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை நுகேகொடையில் இருந்த வெலிமடை நோக்கி வந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்துள்ள நிலையில் எவருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமும், வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையும் விபத்துக்கு காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
The post நுவரெலியா வீதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியா வீதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
